Thelithenilum Madhuramae Lyrics

தெளிதேனிலும் மதுரமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

TAMIL (தமிழ் வரிகள்)
தெளித்தேனிலும் மதுரமே பார்ப்பதற்கு இனிமையே – (2) (சங்கீதம் 19:10)
அந்த பதுமராகம் வஜ்ஜிரகல்லு போல் ஜொலிப்பவர்
என் பகல் இரவின் தியானங்களில் நிறைந்திருப்பவர் – (2) (உன்னதப்பாட்டு 5:10-16, சங்கீதம் 1:2)
உற்றுண்ட பரிமளமே மறுதோன்றி பூங்கொத்தே – (2) (உன்னதப்பாட்டு 1:3)
சாரோன் ரோஜா லீலி புஷ்பம் கிச்சிலிமரம் நீரே
பதினாயிறங்களில் சிறந்தவர் என் ஆத்ம நேசரே – (2) (உன்னதப்பாட்டு 2:1, 5:10)
அவர் தலையோ தங்கமயமாம்
தலைமயிரோ சுருள் சுருளாம் – (2) (உன்னதப்பாட்டு 5:11)
அந்தக் கண்கள் இரண்டும் அழகான புறா கண்களே
அவர் முழு அழகை எடுத்துச்சொல்ல வார்த்தை இல்லையே – (2) (உன்னதப்பாட்டு 5:12-16)