Theeratha Thaakathaal En Ullam

தீராத தாகத்தால் என் உள்ளம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Gnanapaadalgal and Paamalaigal collection.

தீராத தாகத்தால் என் உள்ளம் – Theeratha Thaakathaal En Ullam
1. தீராத தாகத்தால்
என் உள்ளம் தொய்ந்ததே
ஆ, ஜீவ தண்ணீரால்
தேற்றும் நல் மீட்பரே. (தேற்றுமேன் யேசுவே)
2. விடாய்த்த பூமியில்
என் பசி ஆற்றுமே (சகாயம் செய்யுமேன் )
நீர் போஷிக்காவிடில்,
திக்கற்றுச் சாவேனே.
3. தெய்வீக போஜனம்
மெய் மன்னா தேவரீர் (மெய் மன்னா நீர் தாமே )
மண்ணோரின் அமிர்தம் (விண்ணோரின் அமிர்தம்)
என் ஜீவ ஊற்று நீர் (தாரும் என் நாயகனே )
4. உம் தூய ரத்தத்தால்
என் பாவம் போக்கினீர்
உம் திரு மாம்சத்தால்
ஆன்மாவைப் போஷிப்பீர்
4. மாசற்ற ரத்தத்தால்
என் பாவம் போக்குவீர்
மெய்யாம் ஆகாரத்தால்
என் நெஞ்சைப் போஷிப்பீர்
5. மா திவ்விய ஐக்கியத்தை
இதால் உண்டாக்குவீர்
மேலான பாக்கியத்தை (மேலான பாக்கியம்)
ஏராளமாக்குவீர். (அன்பாக ஈகுவீர் )
6. இவ்வருள் பந்தியில்
பிரசன்னமாகுமே (முன்னிலையாகுமேன் )
என் ஏழை நெஞ்சத்தில்
எப்போதும் தங்குமே. (நீங்காமல் தங்குமே.)