Theengai Kanathiruppaai Lyrics

தீங்கைக் காணாதிருப்பாய்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

தீங்கைக் காணாதிருப்பாய் – இனி
தீங்கை காணாதிருப்பாய் (2)
1. தாயானவள் தன் பாலகனை
மறந்தாலும் உன்னை மறக்க மாட்டேன்
கண்ணை இமை காப்பது போல்
உன்னை தினம் காத்திடுவேன்
2. இஸ்ரவேலே நீ பயப்படாதே
பனியைப்போல் உன் மேலிருப்பேன்
லீலியைப் போல மலர்ந்திடுவாய்
லீபனோனைப் போல் வேரூன்றுவாய்
3. கோழி தன் குஞ்சுகளை
செட்டையின் கீழ் அணைப்பது போல்
சேர்த்துக் கொள்வேன் நீ சோர்ந்திடாதே
சேனையே எழுந்தாலும் ஜெயம் கொள்வாய்