thaymatiyil mazhalaiyay

ஒரு தாயின் தாலாட்டு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தாய்மடியில் மழலையாய்
தாரகை ஆளும் தந்தை – ( 2 )
அதை கொஞ்சுவதா வணங்குவதா
ஒரு தாயின் தாலாட்டு – ( 2 )
பாக்கியம் பெற்றேன் இரக்கமும் பெற்றேன்
உயர்வையும் பெற்றேன் தயவையும் பெற்றேன் – ( 2 )
நன்மையினாலே திருப்தி பெற்றேன் – ( 2 )
கிருபை மேல் கிருபை பெற்றேன்
– தாய்மடியில் மழலையாய்
1 ) என் கைகள் அவரை அணைக்கின்றது
ஆத்துமா மகிமை படுகின்றது – ( 2 )
என் ஆவி அவரில் களிக்கூறுது – ( 2 )
மகிழ்ச்சி அடைகின்றது
– தாய்மடியில் மழலையாய்
2 ) வல்லமை உடையவர் மகிமையான
பெரும் காரியம் எனக்கு செய்திட்டாரே – ( 2 )
அவர் நாமம் பரிசுத்தர் பரிசுத்தரே – ( 2 )
மகிமை பூமியை நிறைக்கின்றதே
– தாய்மடியில் மழலையாய்