thaykku anpu varrippookuma

தாய்க்கு அன்பு வற்றிப் போகுமா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

தாய்க்கு அன்பு வற்றிப்போகுமா
தனது பிள்ளை அவள் மறப்பாளோ
தாய் மறந்தாலும் நான் மறவேனே
தயவுள்ள நம் கடவுள் தான் உரைத்தாரே
1.குன்று கூட அசைந்து போகலாம்
குகைகள் கூட பெயர்ந்து போகலாம்
அன்பு கொண்ட எந்தன் நெஞ்சமே
அசைவதில்லை பெயர்வதில்லையே
2.தீ நடுவே நீ நடந்தாலும்
ஆழ்கடலை தான் கடந்தாலும்
தீமை ஏதும் நிகழ்வதில்லையே
தீதின்றியே காத்திடுவேன் நான்
3.கழுகின் சிறகில் குஞ்சை அமர்த்தியே
கனிந்த அன்பில் சுமந்து செல்லுமே
கழுகை போல நான் உனைத்தானே
காலமெல்லாம் சுமந்து செல்வேனே
4. உன்னை அன்று மீட்டதும் நானே
உரிய பெயரில் அழைத்ததும் நானே
என்னைக் கண்டு வந்ததனாலே
என்றும் நீயே எனக்குச் சொந்தமே
தாய்க்கு அன்பு வற்றிப் போகுமா பாடல் வரிகள், Thaikku Anbu Vatri Pogumo Lyrics