thayin anpaipool ennai karuvil kanteere

தாயின் அன்பைபோல் என்னை கருவில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தாயின் அன்பைபோல் என்னை கருவில் கண்டீரே
தாயினும் மேலாய் எனதருகில் நின்றீரே
துன்பப்பட்ட வேளையிலும் துயரப்பட்ட நேரத்திலும் -2
உம் தோளில் சுமந்து காத்தீரே -2 – தாயின் அன்பை
1.சேற்றில் விழுந்த நாறு என்னை மணம் வீசும் மலரில் இனைதீர்
வெட்டப்பட்ட மரம் என்னை ஒட்ட வைத்து நீர் இறைதீர்
சேற்றை நீக்கி வாசம் தந்து
களைகளை நீக்கி வாழ வைத்தீர் – 2 – உம் தோளில்
2.நேற்றிருந்து இன்று இல்லா புல்லின் பூவாய் நான் இருந்தேன்
சாய்ந்து கவிழ்ந்து தரையில் விழுந்த மதிலாக நான் கிடந்தேன் -2
புல்லின் மேலே பணியாய் வந்து மாரு ரூபமாக செய்தீர்
சாய்ந்த மதிலில் சாரம் தந்து
தோள் கொடுத்து தூக்கினீர் – 2 – உம் தோளில்
3.கரையை கடக்கும் அலையை போல. அலை பாய்ந்து நான் திரிந்தேன்
தாயை பிரிந்த சேயை போல. தடுமாறி நான் தவழ்ந்தேன் -2
அமர்ந்த நீரை என்னை மாற்றி. ஆயன் என்னை சேர்த்து கொண்டீர்.
கரம் நீட்டி என்னை தூக்கி. மார்போடு சேர்த்து கொண்டீர். – 2 – உம் தோளில்
தாயின் அன்பைபோல் என்னை கருவில் பாடல் வரிகள், Thaayin Anbaipol Ennai karuvil kandeerea Lyrics