Thayee Neeye Lyrics

தாயே நீயே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs and Roman Catholic Songs collection.

கன்னத்துல கைய வச்சா
கப்பலுந்தா கவுந்திடுமா
உள்ளங்கை அரிச்சு பாத்தா
காசு வந்துரும்மா
வாழ்க்கை ஒன்னும் ஈசி இல்ல
பூமி ஒன்னும் ஓசி இல்ல
தாயப் போல மாறிடலாம்
கடவுள் புள்ளையா
வாயக் கட்டி வயித்த கட்டி
நம்ம உயிர் மண்ணில் வர
மரணத்தின் வாயில் படி
பாத்து வந்தாளே
நம்ம வீட்டு தாயப்போல
கலங்கியே நின்னாலும்
வார்த்தைய மீறாத
கன்னித் தாயே
தாயே
நீயே
தலை கோதி
வழி காட்டு
பாதை மாற மாட்டோம்
கடவுளுக்கே தாயான
மரியும் நீயே
எங்களுக்கும் தாயாக
உடன் வருவாயே
1. போகும் பாதை தூரமுன்னு
பாதியில திரும்பல
நீண்ட நாளா பயணம் செஞ்சு
உறவ காத்து நின்னீங்க
காணாப் போன மகனத் தேடி
பரிதவிச்சு ஓடியே
கண்ட பின்னும் மனசுல
வலிய தாங்கி வந்தீங்க
பாசம் வச்ச நாங்க அம்மா
ஏக்கத்தோட ஓடி வர
காத்து வச்ச கனவே எங்க
வாழ்க்கைப் பூரா மாறிவிட
பரலோகம் வந்து சேர
விரல் கோர்ப்பாயே
கடவுளுக்கே தாயான
மரியும் நீயே
எங்களுக்கும் தாயாக
உடன் வருவாயே
2. கானா ஊரு கல்யாணத்துல
திராட்சை ரசம் பத்தலயாம்
தேடி வந்து உதவி செஞ்சு
மானத்த காத்து தந்தீங்க
வாழ வந்த வயசுப்புள்ளைய
பலி ஆடா இழந்தீங்க
சீடர்கள ஒன்று சேர்க்க
வீறு கொண்டு எழுந்தீங்க
வீரம் கொண்டு ஆள அம்மா
அடிமை நிலை மாத்துவோம்
விடியல் தந்த தாயே – உங்க
வழிய நாங்க தொடருவோம்
பரலோகம் வந்து சேர
விரல் கோர்ப்பாயே