1. thayavulla yesuve

தயவுள்ள யேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1. தயவுள்ள யேசுவே,
என்னை உம்மிடத்திலே
சேர்த்துக் கொள்வதற்கு நீர்
ஏழையாகத் தோன்றினீர்.
2.பெல்லேம் சிற்றூராயினும்
அங்கே நீர் பிறக்கவும்,
மேன்மையுள்ள தாயிற்று,
வேதம் நிறைவேறிற்று.
3.தேவரீரின் ஜென்மமே
புத்திக்கு எட்டாததே;
வானத்தூதர் கூட்டத்தார்
வாழ்த்தி அதைப் பாடினார்.
4.நல்ல செய்தி கேட்கவே
மேய்ப்பர் காணச் சென்றாரே;
ஞானிகளும் வந்தனர்;
காணிக்கை படைத்தனர்.
5.அவ்வாறும்மை நாங்களும்
அண்டிப் பாதம் போற்றவும்,
வந்து எங்கள் நெஞ்சிலே
வாசஞ் செய்யும் கர்த்தரே.