1. thayapara! kannookkumen!

தயாபரா கண்ணோக்குமேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs, Lent Songs and Salvation Army Songs collection.

1. தயாபரா! கண்ணோக்குமேன்!
உம்மாலேயன்றி சாகுவேன்!
என் சீரில்லாமை பாருமேன்!
என் பாவம் நீக்கையா! (நீக்குமே)
பல்லவி
என் பாவம் நீக்கையா! (நீக்குமே)
என் பாவம் நீக்கையா! (நீக்குமே)
உம் இரத்தமே என் கதியே
என் பாவம் நீக்கையா! (நீக்குமே)
2. என் பாவ ஸ்திதி அறிவீர் (என் பாவ நிலை அறிவீர்)
மாசற்ற இரத்தம் சிந்தினீர்
அசுத்தம் யாவும் போக்குவீர் (சீர்க்கேட்டை எல்லாம் மாற்றுவீர் )
என் பாவம் நீக்கையா! (நீக்குமே) – என்
3. மெய் பக்தி ஒன்றுமில்லையே!
நற்கிரியை வீண் பிரயாசமே! (நற்கிரியை வீண் முயற்சியே !)
உம் இரத்தத்தினிமித்தமே (உம் இரத்தத்தின் நிமித்தமே)
என் பாவம் நீக்கையா! (நீக்குமே)– என்
4. இதோ உம் பாதமண்டினேன் (இதோ நற் பாதமண்டினேன்)
தள்ளாமற் சேர்த்துக் கொள்ளுமேன்!
என்றைக்கும் பாதுகாருமேன்
என் பாவம் நீக்கையா!(நீக்குமே) – என்