thayanaval karppaththin pillaiyai maranthalum

தாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை மறந்தாளும்
நீர் என்னை மறப்பதில்லை
தாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை மறந்தாளும்
நான் என்னை மறப்பதில்லை
மறந்திடேனே மறந்திடேனே
உள்ளங்கையிலே வரந்துயுள்ளேன்
மறந்திடேனே மறந்திடேனே
உன் மதில்கள் எப்போதும் என்முன்னே
திக்கற்ற பிள்ளைக்கு சகாயர் நீர்
புயல் சூழ்ந்த நேரத்தில் புகலிடம் நீர்
யார் என்னை மறந்தாலும் மறவாதவர்
யார் என்னை வெறுத்தாலும் வெறுக்காதவர்– மறந்திடேனே
சொர்வுற்ற நேரத்தில் களிப்பாக்கினீர்
பெலவீன நேரத்தில் பெலனளித்தீர்
காயங்கள் எல்லாம் குணமாக்கினீர்
சிறைவாழ்வினின்று மீட்டேடுத்தீர் — மறந்திடேனே
என் தேவை யாவும் அறிந்தவரே
குறைவெல்லாம் நிறைவாக்கி அருள்பவரே
அலைச்சல்கள் எல்லாம் அறிந்தவரே
கண்ணீரை கணக்கில் வைத்தவரே — மறந்திடேனே
தாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை பாடல் வரிகள், Thayaanaval Karpaththin Pillaiyai lyrics