thasanakiya yakkope payappaate thikaiyaate

தாசனாகிய யாக்கோபே பயப்படாதே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தாசனாகிய யாக்கோபே, பயப்படாதே, திகையாதே,
உனக்கு முன்பாக நான் செல்வேன்,
வழிகள் செவ்வையாக்குவேன்.
இதுவரையும் காத்திட்டேன்,
இனியும் காத்திடுவேன்.
மறைவில் இருக்கும் பொக்கிஷங்களை
உனக்குத் தந்திடுவேன்.
வலக்கரத்தினால் தாங்கிடுவேன்,
பெலனைத் தந்திடுவேன்.
வறண்ட நிலத்தின் மேல்
ஆறுகளை ஓடச் செய்வேன்.
உன் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன்.
தாசனாகிய...
தாயைப்போல தேற்றிடுவேன்,
தந்தைப்போல அணைத்திடுவேன்.
கால்கள் கற்களில் இடறாமல்
கருத்தாய் காத்திடுவேன்.
நினைத்திடாத அளவுக்கு
நான் உன்னை உயர்த்திடுவேன்.
தாசனாகிய...
ஆறுகளை நீ கடக்கையிலே
உன்னோடு நானிருப்பேன்.
அக்கினி ஜ்வாலை உன்னைப் பற்றாமல்
காத்துக்கொள்வேன்.
உனக்கு எதிராய் எழும்புவோரை
நானே சிதறடிப்பேன்.
தாசனாகிய...