tharuname parane thayai sey – Tharunamae Parane Thayai Sei

தருணமே பரனே தயை செய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தருணமே பரனே தயை செய் – Tharunamae Parane Thayai Sei
பல்லவி
தருணமே பரனே, தயைசெய் யுபகாரனே!
தயை செய் யுபகாரனே!
அனுபல்லவி
சரணநின்னருள் தந்திவ் வருடமுழுதுங் காரும், -தரு
சரணங்கள்
1.கருணை புரிந்தே யாளுங் காரணனே!
காசிதன்னில் வந்த பூரணனே!
கர்த்தனே! கண்பார்த்தேயுந்தன் -சித்தம் வைத்திரங்கம்தர வேணும் காத்திடுமிந்த வருடம் தோத்திரந் தோத்ரம் நிதம் -தரு
2.இன்னில மீதில் வந்த வுன்னதனே!
விண்ணவர் புகழுஞ் சத்திய நன்னிதனே!
இந்த ஆண்டுதன்னில் வரும் எந்த இடரும் போக்கி
இரக்க மிரக்கம் புரிந், துருக்க முருக்கமுடன்-தரு
3.தீதலகை செய்யும் சோதனையால்
ஏதமுறாது காவுன் சாதனையால்
சிறுமைப்படாமலெம்மேல், கருணைபுரிந்தே நிதம்
சீருடன் பிழைக்க அருள் தாரும், தயாநிதியே!-தரு
4.சங்கைமிகு மிசியோன் சங்கம் வாழி,
தங்குமதின், சபைகள் எங்கும் வாழி
பொங்குங் குருக்களெல்லா, மிங்கிதமுடனே வாழி,
புண்ணியச் செங்கோல் செலுத்தும் மன்னர் துரைகள் வாழி.-தரு