Thanthaen Ennai Yesuvae

தந்தேன் என்னை இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியஞ்செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும்
1.ஜீவகாலம் முழுதும்
தேவபணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து
2.உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வு ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன்
3.கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச்செய்திடும்
4.உந்தஞ் சித்தமே செய்வேன்
என்றன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன்
5.ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்க்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும்