thangkuven unnai enthuven nane

தாங்குவேன் உன்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தாங்குவேன் உன்னை ஏந்துவேன் நானே
சுமப்பேன் உன்னை தப்புவிப்பேனே -2
என்று சொன்னாரே தேவாதி தேவன்
நரை வயது மட்டும் தாங்கிடுவாரே -2
வாக்கினும் சொன்னதையே தம் கரத்தினால்
நிறைவேற்றுவாரே -2 – தாங்குவேன்
ஆறுகளை நீ கடக்கும்போது
அவைகள் உன்மேல் புரளாது
அக்கினியில் நீ நடக்கும்போது
ஜுவாலை உன்மேல் பற்றாது -2
உன் சூரியன் அஸ்தமிப்பதில்லை
உன் சந்திரன் மறைவதுமில்லை -2 – தாங்குவேன்
நிந்தைகளை நீ சகிக்கும்போது
உன் கண்ணீரை துடைத்திடுவாரே
அவமானத்தால் குன்றும்போது
உன் நுகத்தை முறித்திடுவாரே -2
நித்திய வெளிச்சம் அவரே
உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே -2- தாங்குவேன்