thalattu patal

தாலாட்டு பாட வந்தேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

தாலாட்டு பாடல்
தாலாட்டு பாட வந்தேன் இயேசு பாலனே – எம்மை
தாய் போல காக்க வந்த இயேசு பாலனே
எம் பாவம் போக்க வந்த இயேசு பாலனே
எம் வாழ்வை மாற்ற வந்த இயேசு பாலனே
எம்மோடு வாழ வந்த செல்ல மகனே –
ஆராரோ, ஆரிராரோ – 2
மழலை வடிவாக மரியின் மகனாக
மனுக்குலம் காக்க வந்த இயேசு பாலனே
அன்பின் வடிவாக அழகின் நிறைவாக
அமைதி கொண்டு வந்த இயேசு பாலனே
கவலை நீக்கி கண்ணீரை போக்க
இந்நாளில் எமக்காக பிறந்த பாலனே எங்கள் இயேசு பாலனே
ஆராரோ, ஆரிராரோ -2
கண்ணின் மணிபோல எம்மை காத்திடவே
கடுங்குளிர் காலத்திலே பிறந்த பாலனே
ஏழை குடியினில் எளிய வடிவினில்
உலகின் பாவம் போக்க பிறந்த பாலனே
துன்பங்கள் நீக்கி ஆறுதல் தந்திட
எம் வாழ்வில் வசந்தம் வீச பிறந்த பாலனே எங்கள் இயேசு பாலனே – 2
ஆராரோ, ஆரிராரோ – 2