thalaivane, aasariyane

தலைவனே ஆசாரியனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தலைவனே, ஆசாரியனே,
மீதியான ஜனமே
நிலைகொண்டாரே ஆவியானவர்
என்றும் நமக்குள்ளே-2
கவலை வேண்டாம், பயமும் வேண்டாம்.
திடன் கொள் ஆவியிலே -2
அல்லேலூயா கவலை இல்லையே
அல்லேலூயா பயமும் இல்லையே -2
அசையா காரியம் அசையுமே
அசைக்க பண்ணுவார் கர்த்தரே
வசிக்கிறார் ஆவியாய் நமக்குள்ளே
வல்லமையாய் கிரியை செய்வாரே -2 – தலைவனே
வெறுமை பாத்திரம் நிறையுமே
நிறைக்கப் பண்ணுவார் கர்த்தரே
கனவீன பாத்திரம் ஆனாலும்
மகிமையால் நிரம்ப செய்வாரே -2 – தலைவனே
கலக்கிடும் காரியம் விலகுமே
அவர் கட்டளையால் சமாதானமே
அடக்கி ஆளுவார் கர்த்தரே
அவரை என்றும் தொழுவோயே -2 – தலைவனே