Thalaikuninthavarai Sendrare Lyrics

தலைகுனிந்தவராய் சென்றாரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

தலைகுனிந்தவராய் சென்றாரே (இயேசு)
சிலுவை சுமந்தாரே (2) என்
இயேசு என் சிலுவை சுமந்தாரே
1) ஆணிகள் பாய்ந்த கைகளும் கால்களும்
தொங்கினாரே இயேசு தொங்கினாரே (2)
என் பாவம் போக்க என் சாபம் நீக்க
தொங்கினாரே இயேசு தொங்கினாரே (2)
தலை குனிந்தவராய் நின்றாரே இயேசு
குற்றங்கள் ஏற்றவராய் (2) என்
இயேசு என் குற்றம் ஏற்றவராய் (2)
2) முள்கிரீடம் ஏற்று வாரினால் அடிப்பட்டு
தலை குனிந்தவாராய் நின்றாரே இயேசு (2)
குனிந்து நின்றாரே.
என் நிந்தை போக்க என் மரணம் ஜெயிக்க
தலை குனிந்தவாராய் நின்றாரே இயேசு (2)
3) சிலுவை சுமந்து மரணத்தை வென்று
மீட்பை தந்தாரே இயேசு மீட்பை தந்தாரே (2)
தலை நிமிரச் செய்தாரே இயேசு (4)