thaiyara , thaiya , thaiyara , thaiya. 2

தர்ஷீசுக்குப் போனாரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தையர , தையா , தையர , தையா. 2
ஓ. ஓ. ஓ. ஓ
பல்லவி
தர்ஷீசுக்குப் போனாரே யோனா
நினிவேக்குத் தப்பி ஓடியே
கப்பல் ஏறி பயணம் போனாலும்
கர்த்தர் ஆணை மீற முடியாதே
சரணம்
கொந்தளிப்பு உண்டானதே , கடலிலே
சீட்டுக் குலுக்கி போட்டனரே , பயணிகள்
சீட்டு விழுந்ததே , யோனா பேருக்கு
தன் தவறை உணர்ந்தாரே , யோனா
கடலில் தூக்கிப் போடப்பட்டார் , யோனா
காத்திருந்த பெரிய மீன் விழுங்கியதே ( தர்ஷீசுக்கு )
மனந்திரும்பி ஜெபித்தாரே , யோனா
கரையில் அவரை க்க்கியது மீனே
நினிவேக்கு யோனா திரும்பி வந்தாரே
அழிவு சீக்கிரம் என்று சொன்னாரே
உபவாசம் செய்தனரே , மக்கள் அனைவரும்
மனதுருகி மன்னித்தாரே , அன்பு தேவனே ( தர்ஷீசுக்கு )
காத்திருந்தார யோனா , எரிச்சலோடே
நினிவேயின் அழிவைக் காணவே
ஆமணக்குச் செடியோ , யோனா நினைவிலே
அழியும் ஆத்துமாக்களோ , தேவன் நினைவிலே
பாவ அழுக்கைக் கழுவி நம்மை அணைப்பாரே
நன்றி சொல்லி தேவனை நாம் துதிப்போமே ! ( தர்ஷீசுக்கு )