Thaevanae Ummai Naan Aaraathippaen

தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன்
1.உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா
சுத்தமான தண்ணீர் இரசமானதுவே
அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர்
2.உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா
காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார்
ருசித்தோர் கூறுவார் – இயேசுவே ஆண்டவர்
3.உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா
மாறிடும் உலகில் மாறாதவர் நீரே
உம்மை அறிந்தவர் கூறுவார் ஸ்தோத்திரம்