thaangatumae um kirubai

தாங்கட்டுமே உம் கிருபை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தாங்கட்டுமே உம் கிருபை தேவனே
தனிமையில் நடக்கும் போதெல்லாம்
பெலவீனத்தில் உம் கிருபை பூரணம்
என் மேல் இறங்க வேண்டுமே
தனிமையை நினைத்து அழும் நேரமெல்லாம்
தகப்பனே உம் கிருபை தாங்கட்டுமே
உமது சேவைக்காக அழைத்தீரய்யா
எந்தன் சேவையை நீர் நினைக்கணும்
உமது தரிசனங்கள் என் வாழ்விலே
நீங்க நிறை வேற்றி முடிக்கணும்
கிருபையே கிருபையே
மாறாத தேவ கிருபையே
கிருபையே கிருபையே
நாள்தோறும் தாங்கும் கிருபையே
உலகில் உபத்திரவம் வரும் போதெல்லாம்
உந்தன் கிருபை என்னைத் தாங்கணும்
ஊழிய பாதையில் நான் சோர்ந்து போனால்
உந்தன் கிருபை என்னை நிரணுப்பம்
கிருபையே கிருபையே மாறாத தேவ கிருபையே