Thaai Pola theattrum Devan neerae song lyrics

தாய் போல தேற்றும் தேவன் நீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தாய் போல தேற்றும் தேவன் நீரே
தந்தை போல் ஆற்றும் தெய்வம் நீரே
உம் அன்பு பெரிதையா
அது ஒருநாளும் குறையாதையா
கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயங்கள் ஆற்றுகிறீர் – மன
குறைகளெல்லாம் நீக்கிவிட்டீர்
நிறைவுக்குள் நடத்துகிறீர் – என்னை
வினைகளெல்லாம் தீர்த்து விட்டீர்
விடுதலை தந்து விட்டீர் – எனக்கு
பாவமெல்லாம் கழுவி விட்டீர்
பரிசுத்தம் தந்து விட்டீர் – எனக்கு
வியாதியெல்லாம் சுமந்து விட்டீர்
தழும்பினால் குணமாக்கினீர் – உந்தன்
என் மேல் உந்தன் கண்ணை வைத்து
ஆலோசனை தருகின்றீர்-எனக்கு