thaagam migunthorae keerthanai

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தாகம் மிகுந்தவரே அமர்ந்த
தண்ணீரண்டை வாரும்
ஏகன் நானுங்களையே அழைக்கும் என்தன்
இன்பவாக்குத்தத்தமே நம்பி
வேகமாக ஓடி வாருமெனதிடம்
வேண்டியதைத் தருவேன்
காசுபணமது, அற்றுலகந்தன்னில்
கஷ்டப்படுவோரே விசு
வாசமாய் என்னிடம் வந்து விலையின்றி
வாங்கியே சாப்பிடுமே
பாரச்சுமையோடு பாரில் வருத்தங்கள்
பட்டு உழல்வோரே வாரும்
நேரே உமக்கிளைப்பாறுதலாவியை
நேசமாய்த் தந்திடுவேன்
அப்பமல்லாத பொருளையும் திருப்தி
ஆகாத வஸ்துவையும் நம்பித்
தப்பிதமாய்ப் பிரயாசத்தையும் பணம்
தன்னையுமேன் கெடுப்பீர்
கர்த்தரைக் கண்டடையத்தக்க காலத்தில்
கண்டிடுமே உடனே உந்தன்
அத்தன் சமீபமாக இருக்கும் போதே
ஆவலாய்க் கூப்பிடுமே