sunthara kuyilkal patum poothu

சுந்தர குயில்கள் பாடும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

சுந்தர குயில்கள் பாடும் போது
விண்ணக குயில்களும் பிறந்ததே
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கிடவே
உலகில் மகிமை தங்கிடவே
உன்னதர் பிறந்தாரே
1.மாசில்லா தேவா பலனே
நல் வழி காட்டிடும் மேய்ப்பர் நீரே
உலகை ரட்சிக்க வந்த தேவா
நம் பாவம் சுமந்த ஆட்டுக்குட்டி
அன்பின் ஆவியை ஊற்றிடவே
அருமை ரட்சகர் வந்துதித்தார்
ஆரிரரோ பாடிடவே
வின் தூதர் வந்தனரே
தூயவன் பிறந்த இந்நாளிலே
தாழ்மையாய் பணித்து போற்றிடுவோம் – சுந்தர
2.மானிட பாவம் அகன்றிட
புள்ளனை மீதினில் தாழ்மையானார்
மாந்தர்காய் தன்னுயிர் தந்திடவே
விண்ணகம் துறந்து மேன்மையனார்
நித்திய வாழ்வை அடைந்திட
தூய வாழ்வை தந்திடுவார்
காலத்தின் அருமை உணர்ந்திட
ஞானத்தை தந்து நடத்துவார்
அன்பில்லா சாபத்தை வென்றிடுவோம்
அற்புத பலனை வாழ்ந்திடுவோம் – சுந்தர