Sthoththiramae Sthoththiramae Appa

ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Sthoththiramae Sthoththiramae Appa – ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
அப்பா அப்பா உம் கிருபை
எனக்குப் போதும் அப்பா அப்பா
நல்லவரே வல்லவரே(3)
1.கர்த்தரே என் கன்மலையும்
கோட்டையுமானார்
இரட்சகரும் தேவனுமானார் – நான்
நம்பின என் துருகமும் கேடகமானார்
என் இரட்சணிய கொம்புமானார்
நல்லவரே வல்லவரே
2.தேவரீர் என் இருளையெல்லாம்
வெளிச்சமாக்கினீர்
எனது விளக்கை ஏற்றி வைத்தீர்
ஒரு சேனைக்குள்ளே
பாயச்செய்து போரிடச் செய்தீர்
மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர்
நல்லவரே வல்லவரே
3.உம்முடைய வலக்கரத்தால்
என்னை தாங்கினீர் – உம்
காருணியத்தால் பெரியவனானேன்
நான் செல்லுகின்ற
பாதையெல்லாம் அகலமாக்கினீர்
வழுவாமல் நடந்து செல்கிறேன்
நல்லவரே வல்லவரே