Soththiram Soththiramey

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Sthosthiram Sthosthiramae Yesu – ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசு
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
இயேசு சுவாமிக்கு ஸ்தோத்திரமே
தோஷி எனை இரட்சித்த
பரிசுத்தர்க்கு ஸ்தோத்திரமே
கோடா கோடி தூதர்கள்
சபை கூடி நடனமாடி
பாடி உமைத் துதிக்கப்- பாவி
யானும் உமைத் துதிப்பேன்
கேருபீன் சேராபீன்கள்
உடல் செட்டைகளால் மூடி
நேராய் உமைத் துதிக்க – நீசன்
யானும் உமைத் துதிப்பேன்
பரிசுத்தவான்கள் சங்கம்
எங்கள் பார்த்திபன் இயேசுவையே
தரிசித்துப் போற்றிடவே-தாசன்
யானும் உமைத் துதிப்பேன்
மூப்பர்கள் சுற்றி நின்று
எங்கள் முன்னவன் இயேசுவையே
ஆர்ப்பரித்துத் துதிக்க-
அடி யானும் உமைத் துதிப்பேன்
வானத்தின் ஜோதி எல்லாம்
தேவ மைந்தனையே போற்றி
ஞாலத்திலே துதிக்கப் –
பாவி யானும் உமைத் துதிப்பேன்
தாழ்த்தித் தலை குனிந்து
இரத்தச் சாட்சிகள் கூட்டமெல்லாம்.
வாழ்த்தி உமைத் துதிக்கப் –
பாவி யானும் உமைத் துதிப்பேன்