Sornthu povathillai

சோர்ந்து போவதில்லை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சோர்ந்து போவதில்லை
நான் அழிந்து போவதில்லை
உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்கப்படுகின்ற நேரம் இது
நான் ஸ்தோத்தரிப்பேன் கிறிஸ்துவையே
அவர் மகிமை விளங்கிடுதே
அவர் இறக்கத்தினால் மாற கிருபையினால்
ஸ்தோத்திரம் பெருகிடுதே
எல்லாவற்றிலும் சம்பூர்ணராய்
கிருபையை பெருகிட செய்பவரே
நான் விதைக்கிறதை பெருக செய்து
விளைச்சலை வத்திக்க செய்பவரே
சோர்ந்து போவதில்லை
நான் அழிந்து போவதில்லை
உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்கப்படுகின்ற நேரம் இது
2.அரண்களை நிர்மூலமாக்குகின்ற
தேவ பலமுள்ள வார்த்தையை எனக்குத் தந்தார்
அவருடனே நான் இணைந்திருக்க
கிறிஸ்துவின் சாயலை எனக்குத் தந்தார்
சோர்ந்து போவதில்லை
நான் அழிந்து போவதில்லை
உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்கப்படுகின்ற நேரம் இது
சோர்ந்து போவதில்லை பாடல் வரிகள், sornthu povathillai Lyrics