soppanangkal nallatha kettatha – Are dreams good or bad?

சொப்பனங்கள் நல்லதா கெட்டதா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சொப்பனங்கள் நல்லதா கெட்டதா – Are dreams good or bad?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே
இது உங்கள் வெற்றியின் வாழ்க்கை நிகழ்ச்சி.
நம்ம ஒவ்வொரு நாளும் வெற்றியா வாழணும்
என்பதற்காகவே இயேசு கிறிஸ்து உலகத்தில வந்தார்
மரித்தார் உயிரோடு எழுந்து போனார்.
அதனாலதான் இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்
நான் அவைகளுக்கு ஜீவன் உண்டாய் இருக்கவும்,
அது பரிபூரணம் அடையுமே வந்தேன் என்று யோவான்ல சொல்லியிருக்கிறார்.
நம்ம சில விஷயங்கள்ல இன்னும் ஜெயம் எடுக்காம
இருக்கிறோம். அப்படிப்பட்ட விஷயங்கள்ல எப்படி
ஜெயத்தை எடுப்பது?
சொப்பனம் கனவுகள்.
கனவுகள் நல்லதா கெட்டதா?
சொப்பனங்கள் ரொம்ப நல்லது.
ஏன்னா கடவுளை நீங்க பார்க்கும்போது நிறைய பேர்கிட்ட
சொப்பனங்கள் மூலமாய் தன்னுடைய காரியங்களை பேசி இருக்கிறார்.
உதாரணமாக யோசேப்பை எடுத்து கொள்ளுங்க
யாக்கோபை எடுத்து கொள்ளுங்க
தானியேலை எடுத்து கொள்ளுங்க
தூக்கம் என்பது கடவுள் கிட்ட இருந்து வர ஒரு பெரிய ஆசீர்வாதம்.
சங்கீதம் 4: 8 இப்படி சொல்லப்பட்டிருக்கிறது
சமாதானத்தோடு படுத்துக்கொண்டு நித்திரை செய்வேன்.
கர்த்தாவே நீர் ஒருவரே என்னை சுகமாய் தங்க பண்ணுகிறீர்.
ஒரு மனிதன் நன்றாக சமாதானத்தோடு தூங்கணும்
அப்படின்றது கடவுள் கிட்ட இருந்துவர பெரிய ஆசீர்வாதம்.
ஆனா இன்னைக்கு அப்படித்தான் இருக்கிறோமா என்று
பார்க்கும்போது சில பேரு சரியாவே இரவுல தூங்குறது கிடையாது.
பயங்கரமான சொப்பனங்களால்
பாதிக்கப்படுறாங்க. திடுக்கிட்டு எழும்புறாங்க.
எனக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு கனவு வந்துச்சு எனக்கு தெரியவே இல்லை அப்படின்னு சொல்லி கொஞ்ச நேரம் கலக்கம் அடைஞ்சிறாங்க.
காலையில அதை குறித்து யோசித்து பார்க்க ஆரம்பிச்சிறாங்க.
சங்கீதம் 91:5 வசனம் சொல்லப்பட்டிருக்கிறது.
இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கு நான் பயப்பட மாட்டேன்.
இரவில பயங்கரங்கள் நம்மளுடைய கனவுல நிச்சயமா வரக்கூடாது. ஏன் இப்படி பயங்கரமான கனவுகள் வருது அப்படின்னு சொல்லிட்டு பார்த்தோம்னா
எபேசியர் 6: 12ல சொல்லப்பட்டிருக்குது இப்பிரபஞ்சத்தின்
அந்தகார லோகாதிபதிகளோடும் வான மண்டலங்கள் உள்ள
பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் உங்களுக்கு போராட்டம்
உண்டு யுத்தம் உண்டு.
அதாவது கர்த்தர் எப்படி ஒரு மனுஷன் கிட்ட சொப்பனத்தின்
மூலம் சில நேரம் பேசுறாரோ அதேபோல பிசாசானவனும் நமக்கு
இருக்கிற ஆழமான இயக்கங்கள் தீராத சில பிரச்சனைகள் மூலமாய் அதன் மூலமா உங்களுக்கு பயங்கரங்களை இரவு
நேரத்தில கொண்டு வந்து உங்க வாழ்க்கையில கலக்கத்தை கொண்டு வருவதற்கு அவன் ஆயத்தமா இருக்கிறான்.
இன்னைக்கெல்லாம் பாத்தீங்கன்னா சின்ன பிள்ளைங்க கூட
பயங்கரமான கனவுகளால் பாதிக்கப்படுறாங்க.
இதுக்கெல்லாம் காரணம் இல்லைன்னு நினைக்கிறீங்களா
நிச்சயமா காரணம் இருக்கிறது.
இதிலிருந்து எப்படி நம்ம ஜெயம் எடுக்க வேண்டும் என்பதை
குறித்து இன்னைக்கு சில ஆலோசனை நான் உங்களுக்கு சொல்றேன்.
முதலாவதாக
முந்தினவைகளை நினைக்க வேண்டாம்
பூர்வமானவைகளை சிந்திக்க வேண்டாம்
இதோ நான் புதிய காரியத்தை செய்கிறேன்.
அப்படின்னு கர்த்தர் நமக்கு வாக்குதத்தம் பண்ணி இருக்கிறார்.
உங்க ஆள் மனதில பதிந்த சில காரியங்களை நீங்க ஜெபத்தின் மூலமா ஆண்டவர் கிட்ட நீங்க கேட்கணும். இதையெல்லாம் மறப்பதற்கு எனக்கு பலன் தாங்க அப்படின்னு கேட்கும்போது
கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார்.
இரண்டாவது இப்போ நம்ம வாழ்ற உலகத்துல எங்க பார்த்தாலும் நடக்கிற சம்பவங்களை காட்டுறாங்க. எங்கேயோ நடந்த பிரச்சனைகளை ரொம்ப ஆராய்ந்து பார்க்கும்போது இதனால் வருகிற பாதிப்புகள் உங்க ஆள் மனதில பதிந்து தேவன் கொடுக்கிற ஆசீர்வாதமான இந்த தூக்கத்தை உங்க வாழ்க்கையில பெரிய கலக்கமாக அதாவது நைட் மேர்ஸாக மாற்றி கொண்டிருக்கிறான்.
இதிலிருந்து நிச்சயமாநீங்க வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதற்கு நம்ம செய்ய வேண்டிய காரியம் என்ன அப்படின்னு
பார்க்கும்போது மிகவும் சுலபமான காரியம்தான்.
முதலாவது வேதம்
நமக்கு அறிவுறுத்துகிற காரியம் என்னன்னா
சிறப்பான யோசனைகளை நாம் சிந்திக்க வேண்டும்.
உண்மை உள்ளவைகள் எவைகளோ
ஒழுக்கம் உள்ளவைகள்
எவைகளோ கற்புள்ளவைகள்
எவைகளோ எது புண்ணியமோ
எது புகழோ இவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள் என்று
வேதம் நமக்கு ஆலோசனை கொடுக்கிறது.
இப்படிப்பட்ட காரியங்களை டீப்பா பார்க்கணும் அப்படின்ற ஹாபிட் உங்களுக்குள்ள பழக்கங்கள் உங்களுக்குள்ள இருக்குமானால் அந்த பழக்கத்தை நீங்க உடனடியாக விடுவதற்கான பலனை கர்த்தர் கிட்ட கேட்கணும்.
கிறிஸ்தவ பிள்ளைகளாய் இருக்கிறனா நம்முடைய சிந்தனையை
காத்துக்கொள்வது அவசியமா இருக்குது.
கடைசியாக இதிலிருந்து எப்படி வெளியில வரலாம் அப்படின்னு
சொல்லிட்டு பார்க்கும்போது நமக்கு கொடுக்கப்பட்ட
ஒரே ஆயுதம் இயேசு கிறிஸ்துவின் நாமம்.
இயேசு கிறிஸ்துவுடைய நாமத்தினால எனக்கு இப்படிப்பட்ட
சொப்பனங்களல இருந்து எனக்கு விடுதலை தாங்க அப்படின்னு நீங்க கருத்தா ஜெபிக்கும் பொழுது மெய்யான விடுதலையை நீங்க
சுதந்திரித்துக் கொள்ள முடியும்.
தாவீது சொன்னது போல எனக்கு சமாதானமான தூக்கத்தை உங்ககிட்ட இருந்துவர இந்த ஆசீர்வாதத்தை நான் அனுபவிக்கிறவர்களா இருக்கணும் அப்படின்றத நீங்க உரிமையோடு கேட்கும் பொழுது கர்த்தர் உங்களுக்கு நிச்சயமாய் தந்தருளுவார்.
ஒவ்வொரு நாளும் காலையில எந்திச்சு சிந்திச்சு பாருங்க இன்னைக்கு என்னோட தூக்கம் எப்படி இருந்துச்சு சுகமா
இருந்துச்சா என்று நீங்க சிந்திச்சு பாருங்க அப்படி இல்லன்னா ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கிட்ட கேளுங்க இயேசப்பா இந்த ஆசீர்வாதத்தை எனக்கு தாங்க நான் சமாதானமாய் படுத்து
எழும்புகிற ஒரு நபராக என்னை மாற்றுங்கன்னு நீங்க கேட்கும்போது கர்த்தர் நிச்சயமா உங்களுக்கு
தந்தருளுவார் இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
What Are Dreams? Good or Bad?
Dreams are powerful. They can come from:
God as a source of hope, guidance, or promise.
Our minds processing daily thoughts or stress.
Spiritual darkness trying to disturb our peace—this includes fear, nightmares, or restless nights.
Good Dreams
The Bible shows us wonderful “God-dreams.” For example:
Joseph received dreams about his future in Egypt.
Jacob saw a heavenly ladder dream at Bethel.
Daniel received messages about nations and God’s plans.
These dreams brought clarity, hope, and purpose.
2. Nightmares: When Trouble Comes
Not all dreams are good. The Bible tells us:
Psalm 91:5: “You will not fear the terror of the night.”
Ephesians 6:12: We struggle “with spiritual forces of evil” that can impact our thoughts and rest.
If your night is filled with terror or confusion, it could be the enemy stirring your mind. Even children today face disturbing dreams. These come not from God but from spiritual attacks aimed at disturbing our peace.
3. How Do We Overcome These Troubling Dreams?
Even strong dreams can’t defeat us if we know how to respond. Here are some steps:
A. Let Go of Past Doubts
God says:
“Forget the former things; I am doing a new thing.” (Isaiah 43:18–19)
Don’t hold on to old worries or past failures. They can feed negative dreams. Choose to believe God is working something new in you.
B. Pray with Intention
Bring your fears and worries to God. Confess that you want His peace instead of fear. Ask:
“Lord, remove disturbing thoughts. Fill my mind with Your calm.”
The Holy Spirit brings powerful peace when we pray with faith.
C. Fill Your Mind with Good Thoughts
Philippians 4:8 encourages us:
“Think about things that are true, noble, right, pure, lovely, admirable, excellent, and praiseworthy.”
Before sleeping, reflect on encouraging Bible verses or happy memories. This builds a strong spiritual shield.
D. Claim the Name of Jesus
Speak aloud before bedtime:
“In the name of Jesus, I reject all dark dreams and restore peace in my mind.”
The name of Jesus is a powerful weapon against fear and spiritual influence.
4. Create a Peaceful Sleep Environment
A calm evening routine helps your mind rest deeply:
Disconnect from devices at least 30 minutes before bed.
Read the Bible or a devotional.
Pray or meditate with calm music or the name of Jesus.
When your bedtime routine honours God, your soul will be ready for peaceful sleep.
5. Check Daily: Was My Sleep Comfortable?
In the morning, honestly ask:
Did I sleep well?
Did any confusing thought wake me up?
Did I feel God’s peace?
If your sleep was restful, thank God. If it wasn’t, pray and trust that God will help the next night.
Finding Peace Again
I once had a heavy dream that filled me with fear. Even though I prayed, I found myself replaying it the next day. But when I chose to pray again—and filled my mind with praise and Bible verses—peace came. That night, I slept deeply and woke refreshed. I realised that spending extra spiritual effort before sleep brings lasting change.
Walk in Victory Every Night
Recognise the source of your dreams.
Lay all confusion at Jesus’ feet.
Fill your mind with truth and praise.
Speak God’s peace over your sleep.
Keep a holy, peaceful evening routine.
Dreams can be good, but troubling dreams are not from God. You don’t need to fear them. With prayer, God’s Word, and spiritual protection in Jesus’ name, you can rest confidently—knowing that God is keeping your mind in perfect peace (Philippians 4:7).
சொப்பனங்கள் நல்லதா கெட்டதா – Are dreams good or bad? Bible Message
All my hopes and all my dreams Lyrics
Daniel 10-12 Daniel’s Vision
Daniel receives a vision and is troubled. Would I b…