soornthu pookamatten

சோர்ந்து போகமாட்டேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சோர்ந்து போகமாட்டேன்
என் நேசர் என்னோடு வருவார்
சோர்ந்து போகமாட்டேன்
என் நேசர் எனக்காய் யுத்தம் செய்வார்
அன்பின் தேவன் அவர்
என்னை நடத்துவார்
அன்பின் தேவன் அவர்
எல்லா தீங்குக்கும் விலக்கி காத்திடுவார்
நான் சோர்வின் பாதயில் நடக்கையில்
என் கரத்தை அன்பாய் இருக்கினார்-2
நான் உன்னோடு கூட இருப்பேன்
நீ பயப்படாதே என்றார்-2 – சோர்ந்து
நான் கண்ணீரின் பாதையில் நடக்கையில்
என்னை அன்பாய் தூக்கி சுமந்தார்-2
நான் யெகோவா தேவன்
எல்லாம் பார்த்துக்கொள்வேன் என்றார் -2 – சோர்ந்து
நான் பாவக் குழியில் இருக்கையில்
அவர் கரத்தால் என்னை தூக்கினார்-2
நான் உனக்காய் இரத்தம் சிந்தினேன்
என்று என் பாவம் போக்கினார் -2 – சோர்ந்து