sollungkappa nan seythituven

சொல்லுங்கப்பா நான் செய்திடுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சொல்லுங்கப்பா நான் செய்திடுவேன்
பாதை காட்டுங்கப்பா அதில் நடந்திடுவேன் -2
அனுப்புங்கப்பா அங்கே சென்றிடுவேன்-2
உம் விருப்பம் நிறைவேற்றுவேன்-2
உங்க சித்தம் செய்வதே என் பாக்கியம்
உம் பாதம் அமர்வதே எந்தன் ஸ்லாக்கியம்-2
அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல்
வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் போதுமையா -2
அனலாய் எரியனும் எரியனுமே
அக்கினியாய் மற்றவரை பற்ற வைக்கனும் -நான் -2
உயிரோடிருப்பதாக நினைத்துக் கொண்டு
உயிரற்ற சடலமாக வாழ்ந்தது போதும்-2
உயிரே உணர்வே என் இயேசையா-2
உயிராய் எனக்குள் வாருமையா-2