siththappati irangkaiya – Siththapadi Erangaiya

சித்தப்படி இரங்கையா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சித்தப்படி இரங்கையா – Siththapadi Erangaiya
பல்லவி
சித்தப்படி இரங்கையா-நின் திருச்
சித்தப்படி இரங்கையா!
அனுபல்லவி
அத்தனின் கரத்தினுள் சொத்தான சபைதனில்
பக்தர்கள் கண்ணீரையே நித்தமருந்துவதால்
சரணங்கள்
1.உன்னதனாஞ் செடியோடே-ஒட்டப்பெற்ற
ஒரு கூட்டம் கொடிகளிவை-இன்று
வன்மலை அக்கினியால் வாடி வதங்கிடலை
நின் வாக்குப் பொய்த்திடாது இன்றே தடுத்தாட்கொண்டு
2.திரும்பி வருவீர் ஐயனே-செடியை
விரும்பி விசாரித்தருள-இன்னும்
திரும்பவும் ஆவியருள் திடனாய் எமைத் தாங்கிட
பரமதில் போலுன் சித்தம் தரைமீதில் தழைத்திட