Sirumaiyai Neer Kandu Lyrics

சிறுமையை நீர் கண்டு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் சிறுமையை நீர் கண்டு
என் அழுகையை நீர் கேட்டு
நிந்தித்த நிந்தனைக்கு பதிலாக
நன்மை செய்தவரே
(2 சாமுவேல் 16:12)
நன்றி தகப்பனே எனக்கு நன்மை செய்தவரே
உயிருள்ள நாளெல்லாம் உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
1. அடிமையாய் நடத்தின ஜனங்களின் முன்
அற்புத அடையாளமாய் மாற்றினீர்
உமக்கு கீர்த்தியை உண்டாக்கினீர்
வெட்கப்பட விடவில்லை
நன்றி தகப்பனே
2. சிவந்த சமுத்திரம் முன்பாக
கூப்பிட்ட என் சத்தம் நீர் கேட்டீர்
கால் நனையாமல் நடத்தி வந்தீர்
அனைவரின் கண்பார்க்க உயர்த்தி வைத்தீர்
நன்றி தகப்பனே