sirikum nalla sevaname

சிரிக்கும் நல்ல செவ்வானமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

சிரிக்கும் நல்ல செவ்வானமே
நெஞ்சில் என்றும் இறைஞானமே
பார்த்து பார்த்து ரசிக்க ரசிக்க
நெஞ்சில் பூத்த பூமேகமே
மழை தரும் கார்மேகமே
1)மலராய் மலர்ந்தாய் மனதை கவர்ந்தாய்
மணம் வீச செய்தாய்
எந்தன் வாழ்வில் வசந்தம் தந்தாய் என்னென்று நான் சொல்வேனோ
எண்ணி எண்ணி நான் மகிழ்வெனோ
பார்த்து பார்த்து ரசிக்க ரசிக்க
நெஞ்சில் பூத்த பூமேகமே
மழை தரும் கார்மேகமே
2) கண்ணுக்குள் இருந்தாய் கருத்தில் நுழைந்தாய் கனவு காண செய்தாய்
அன்பின் சிறகை எனக்கு தந்தாய்
என்னென்று நான் சொல்வேனோ
எண்ணி எண்ணி நான் மகிழ்வெனோ
பார்த்து பார்த்து ரசிக்க ரசிக்க
நெஞ்சில் பூத்த பூமேகமே
மழை தரும் கார்மேகமே
3) உணர்வில் இணைந்தாய் உயிரில் கலந்தாய் உனதாய் மாற்றி விட்டாய்
என்னை உன்னில் வாழ செய்தாய்
என்னென்று நான் சொல்வேனோ
எண்ணி எண்ணி நான் மகிழ்வெனோ
பார்த்து பார்த்து ரசிக்க ரசிக்க
நெஞ்சில் பூத்த பூமேகமே
மழை தரும் கார்மேகமே