sinnavan aayiram aayiramay perukuvan

சின்னவன் ஆயிரம் ஆயிரமாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் பெருகுவான்
சிறியவன் பலத்த ஜாதியாய் மாறுவான்
சிறுமைப்பட்ட நாட்கள் முடிந்து போனதே
சிங்காசனத்தில் அமரும் வேளை வந்ததே
கையளவு மேகம் கனமழை பொழிந்திடும் ஆசீர்வாதம் பெருகிடுமே
வனாந்திரம் செழிப்பான வயல்வெளியாகிடும்
வரட்சியாவும் நீங்கிடுமே
தூர்ந்து போன துரவுகளில் மீண்டும் நீரூற்று சுரந்திடுமே
தேசத்தில் பலுகும்படி ரெகோபோத் துவங்கிடுமே
கானல் நீராய் கடந்திட்ட காலங்கள் வான் மழையாய் பொழிந்திடுமே
அறுவடை காணாத தரிசான நிலமெல்லாம் விளைநிலமாய் மாறிடுமே
கனவாய் இருந்த ஆசைகள் எல்லாம் நிஜமாய் நடக்கப்போகிறதே
காத்திருந்து இளைத்த உள்ளம் விரும்பிய நன்மை பெற்றிடுமே