sinnap poo nanallavoo

சின்னப் பூ நானல்லவோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சின்னப் பூ நானல்லவோ
தேவனே நான் சொல்லவோ
என்னை உம் பாதத்திலே
ஏற்றுக் கொண்டால் என்னவோ
அல்லேலூயா அல்லேலூயா
துதியும் கனமும் மகிமையும் தேவனுக்கே
வண்ணம் எனக்கில்லையே
வாசல் திறப்பில்லையே
மண்ணில் உதிரும் முன்னே
வாழ்வு கொடுத்தால் என்ன
ஐயா உம் தோள்களிலே
ஆடிடும் மலரிலே
மெய்யாய் ஒரு மலராய்
தேவன் தரவில்லையே
உயியும் உயிர் பிரிந்தே
ஓடிப்பறக்கும் முன்னே
தூய விரல்களிலே
தொட்டுப் பறித்தால் என்ன
சின்னப் பூ நானல்லவோ பாடல் வரிகள், Chinna Poo Naannallavo Lyrics