sinnamalai singkarame – Chinnamalai Singarame

சின்னமலை சிங்காரமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

சின்னமலை சிங்காரமே – Chinnamalai Singarame
சின்னமலை சிங்காரமே – எங்கள்
ஆரோக்ய மாதாவே
உம்மைத்தேடி நாடி வந்தோம் எம்குறை தீர்ப்பாயே
வாழ்க மரியே வாழ்க -2
வாழ்க அம்மா
1.உந்தன் பாதம் நாடி வந்தோம்
உந்தன் அன்பை தேடினோம் 2
ஆராத துயர்தீர்க்கும் எங்கள் தாய் மரியே – 2
வாழ்ந்திட உம்மை தேடி வந்தோம்
தாயே மரியே எம்மை பாரும் 2
2.சின்ன மலையில் வாழும் தாயே
எங்கள் மனங்களில் இருப்பாயே 2
அகலாத குறை போக்கும் எங்கள் மாமரியே 2
வாழ்ந்திட உம்மை தேடி வந்தோம்
தாயே மரியே எம்மை பாரும் 2