Siluvaiyil Araiyunda Yesuvae

சிலுவையில் அறையுண்ட ஏசுவே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs and Lent Songs collection.

சிலுவையில் அறையுண்ட ஏசுவே – Siluvaiyil araiyunda yesuve
சிலுவையில் அறையுண்ட இயேசுவே
உம்மையே நோக்கி பார்க்கிறேன் என்பாவச் சுமைகளோடு
உம்பாத நிழலில் நிற்கின்றேன் இயேசுவே உமது இரத்தத்தால் என்னை கழுவி இன்றே உம்முடன் வான் வீட்டில் என்னையும் சேருமே
1.தந்தையே இவர்களை மன்னியும் அறியாமல் செய்தார்கள் என்றீர் மாறாத இரக்கத்தால் என்னை மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே
அம்மா இதோ உம் மகன் என்றீர் இதோ உம் தாய் என்றீர் நேசத்தால் அன்னையின் அன்பினில் நாளுமே என்னையும் வாழ்ந்திட செய்யுமே
தாகமாய் உள்ளது இறைவா ஏன் என்னை கைவிட்டீர் என்றீரே கைவிடா நேசத்தால் எனக்கும் தாகம் ஆற்றும் ஜீவ நீரைத் தாருமே
தந்தையே உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன் என்னையும் உமது கரத்தில் முற்றிலும் கையளிக்கின்றேன்