siluvaippathai patal – Siluvai Paathai paadal

சிலுவைப்பாதை பாடல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs and Roman Catholic Songs collection.

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal
உணர வேண்டுமே / உம்மை தொடர வேண்டுமே உம்மை நான் தொடர வேண்டுமே- இயேசுவே உம் சிலுவையை சுமக்க வேண்டுமே.
தீர்ப்பினை சுகமாய் ஏற்றீரே, பணிவாய் பழிசுமந்து நின்றீரே -உணர வேண்டுமே, உம்மை
உலகின் பாவங்கள் போக்கவே, சிலுவை சுமந்தீர் தோளிலே
தாங்கிட முடியா சுமையினால், தரையில் தடுமாறி வீழ்ந்தீரே
இடர்படும் சுதனை கண்டதும், அன்னை மரியாளும் கலங்கினார்.
உம் திருத் தோள்கள் ஓய்ந்திட, சீமோன் மனம் கொண்டு உதவினார்
உயிரின் வடிவாம் உதிரத்தால், உம் முகம் பதித்தீர் துணியிலே 5
கால்கள் நடுங்கியே சாய்ந்திட, மீண்டும் வீழ்ந்தீர் மண்ணிலே
உமக்காய் கலங்கிய மகளிரை, அன்பாய் தேற்றினீர். தெய்வமே
நாடியும் நரம்பும் தளர்ந்ததே, மூன்றாம் முறையாக வீழ்ந்தீரே
அதிசயம் புரியும் ஆடையும், அகன்றிட நலிந்தே வாடினீர்
11.கரங்களை ஆணிகள் துளைத்திட, சிலுவையில் தொங்கினீர் இயேசுவே
12.பாவி என் வாழ்வை மீட்டிட, உயிரையும் தந்தீர் இயேசுவே
உணவாய் வந்த நல் உடலிது, அன்னை மடிமீது தவழுதே
விண்ணக அரசின் மன்னரே, கல்லறை தனிலே அடங்கினீர்.