siluvaikkarukinil ungka pillai vanthirukka

சிலுவைக்கருகினில் உங்க பிள்ளை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

சிலுவைக்கருகினில் உங்க பிள்ளை வந்திருக்க
சிலுவைக்கருகினில் செல்லப்பிள்ளை வந்திருக்க
உங்க இரத்தத்தினிலே என்னை மீட்டுக்கொண்டீங்க -2
1.என் சிந்தையினால் பாவம் செய்தேன்
என் செயல்களினால் துரோகம் செய்தேன்-2
என் பாவத்தினால் துரம் போனேனேன்
ஆனாலும் பரமன் என்னைத் தேடிவந்தீங்க
பரமன் என்னைத் தேடிவந்தீங்க
பரமன் என்னைத் தேடிவந்தீங்க – சிலுவைக்கருகினில்
2.சிரசினில் முள்முடி சூடினீர்
விலாவினில் ஈட்டிபாய்ந்ததே -2
உம் அழகு கண்கள் என்னைபார்க்கவே
என் அலங்கோலம் என்னில் மறைந்ததே
என் அலங்கோலம் என்னில் மறைந்ததே- சிலுவைக்கருகினில்
3.தடுமாறும் கால்களைக் கண்டேன்
தவித்திடும் இதயம் கண்டேன் -2
கடைசி சொட்டு கண்ணீரும் எனக்காகவே
கடைசிசொட்டு இரத்தமும் எனக்காகவே – சிலுவைக்கருகினில்
சிலுவைக்கருகினில்
உங்க பிள்ளை வந்திருக்க
சிலுவைக்கருகினில்
செல்லப்பிள்ளை வந்திருக்க
உங்க இரத்தத்தினிலே என்னை மீட்டுக்கொண்டீங்க
தூய இரத்தத்தினிலே என்னை மீட்டுக்கொண்டீங்க.
சிலுவைக்கருகினில் உங்க பிள்ளை பாடல் வரிகள், Siluvaikaruginil Unga Pillai Lyrics