siluvai sumanthu pookum maname

சிலுவை சுமந்து போகும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs and Lent Songs collection.

சிலுவை சுமந்து போகும் மனமே
என்னை நினைத்தாயோ -என்
பாவப்பழியினை தோளில் சுமந்து
பயணம் செய்தாயோ
தள்ளாடும் நேரத்தில் தளராதே என்றாயே
தடுமாறும் நேரத்தில் எனக்காகவே விழுந்தாயே
1.கல்வாரிப்பாதையில் சிந்திய இரத்தம்
கண்ணீராய் என்னில் கரையாதோ
கல்மரத் தூணாய் நின்ற என் சிலுவையை
கைவிரித்து அள்ளி அணைத்தாயே
என் தேவனே என்ற உந்தன் குரலால்
உன்னத வாசலைத் திறந்தாயே -2
சிலுவையின் நிழலில் என்றும் நான் நிலைக்க -2
உயிர் வாழ்வேன் ஐயா உனக்காக
ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ…
2.ஆணி என் குற்றம் துளைத்திட்ட போது
மனம் உடைந்து உன் உள்ளம் துடித்தாயோ
பாவம் போக்கும் பலியென மாறி
பலிபொருளாய் உள்ளே உடைந்தாயோ
என் பாவம் போக்க
என்னை காக்க
மௌனமாய் உள்ளே துடித்தாயோ-2
என் பாவம் அறிந்தேன்
என் பழி உணர்ந்தேன் -2
உருகுதே நெஞ்சம் மெழுகாக
சிலுவை சுமந்து போகும் பாடல் வரிகள், Siluvai Sumanthu Pohum lyrics