shekkina magimaiye

ஷெக்கினா மகிமையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அவர் சமூகத்தில் அனந்தம் உண்டு
வேறெங்கும் இல்லா இன்பம் உண்டு
என் தேவனோடு
உறவாடும் நேரம்
ஷெக்கினா மகிமை இறங்கும் நேரம்
ஷெக்கினா மகிமையே
உறவாடும் மகிமையே
விட்டு விலகாத பிரசன்னமே
இத்தனை இன்பம் பார்த்ததில்லை
சொல்லி புரியவும் வார்த்தை இல்லை
என் ஆவி எண்ணில் களி கூர்ந்திடுதே
அபிஷேக தைலம் வழிந்திடுதே
ஏர்மோனிலும் சிறு மலைகளிலும்
நீர் மட்டும் போதும் என்று உணர்ந்தேன்
எச்சூழலிலும் உம் பிரசன்னமே
எவ்விடமும் துதி பீடமே
ஷக்கினா மகிமையே உறவாடும் மகிமையே
விட்டு விலகாத உன் பிரசன்னமே
பகலிலே மேகமாக
இரவிலே அக்னி ஸ்தம்பமாக
காலத்திற்கேற்ற பிரசன்னமே
கானான் வரை என்னை காத்திடுமே
ஆவிக்குளாக்கும் பிரசன்னமே
மாம்சத்தை அழிக்கும் வல்லமையே
ஜீவ நதிகள் புறப்படுதே
தேசத்தில் மகிமை வெளிப்படுதே.