1.settaiyinkeezh nanum thangkituvene

செட்டையின்கீழ் நானும் தங்கிடுவேனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.செட்டையின்கீழ் நானும் தங்கிடுவேனே,
காரிருள் மூடிப் புயல் மோதினும்
நம்பிடுவேன், என்னைக் காத்துக் கொள்வாரே
மீட்டெனைப் பிள்ளையாய்ச் சேர்த்துக்கொண்டார்.
செட்டையின் கீழ், செட்டையின் கீழ்
நின்றெவர் நீக்கிடுவார்?
அன்பின் செட்டையின் கீழ் அமர்வேன்;
பாதுகாப்பாய் என்றென்றைக்கும்.
2.செட்டையின் கீழ் எந்தன் துக்கங்கள் நீங்கி
ஆத்மா இளைப்பாறிப் பூரிக்குதே,
லோகம் என் நோவினை மாற்றக்கூடாதே,
யேசு என் ஆறுதல் மா பாக்கியமே
3.செட்டையினுள் மிக மேலாம் சந்தோஷம்
சோதனைக் காலம் நான் காத்திருப்பேன்
தீமையண்டாது நான் யேசுவினுள்ளே
நித்திய காலம் நிலைத்திருப்பேன்