senaikalin karththar mun selkinrarsong

சேனைகளின் கர்த்தர் முன் செல்கின்றார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சேனைகளின் கர்த்தர் முன் செல்கின்றார்
அவருடன் நாமும் பின் செல்லுவோம்
எதற்கும் பயமில்லையே
என்றும் ஜெயம் நமக்கே – 2
ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அநியாயம் செய்பவன் செய்யட்டும்
அசுத்தமாய் வாழ்பவன் வாழட்டும்
நீதி செய்பவர் செய்யட்டும்
தூய்மையாய் வாழ்பவர் வாழட்டும்
இதோ அவனவனுக்கு அவர்
அளிக்கும் பலன் அவருடன் வருகின்றதே
தேசங்கள் எழுப்புதல் அடைய
எழுந்துவா அவர்பின்னே செல்வோம்
அறுவடை மிகுதியாய் இருப்பதால்
ஆண்டவர் சேவைக்கு அழைக்கிறார்
இதோ நாட்களை வீணாய் கடத்தினால்
வருந்திடுவோமே நாம்
ஐசுவரியம் ஆஸ்தி எல்லாமே
நம் ஆண்டவர் நமக்காய் தந்தாரே
அதனால் தேவனின் இராஜ்யம்
உண்மையாய் உயர்த்தி மகிழ்வோம்
இதோ சீக்கிரம் வரப்போகும் ராஜா
முன் ஆயத்தமாகிடுவோம்