seeyoone aarppari – Seeyonae Aarpari

சீயோனே ஆர்ப்பரி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சீயோனே ஆர்ப்பரி – Seeyonae Aarpari
பல்லவி
சீயோனே ஆர்ப்பரி
சிருஷ்டி கர்த்தரான உந்தன்
சர்வ வல்ல தேவனே
சரணங்கள்
சென்றதாம் பாதைகளிலே
சேதமே யாதுமணுகா
கண்மணி போலக் காவல் செய்தோனை
நன்றியுடன் பாடுவோம் – சீயோனே
நீக்கினார் பாவப்பாரமே
போக்கினார் சாபம் யாவுமே
தாழ்த்தியே நீசக் கோலமதாகி
தம் ஜீவனை ஈந்தாரே – சீயோனே
ஆதரவற்ற நேரத்தில்
ஆறுதலில்லா வேளையில்
அன்பாலணைத்து ஆறுதலீந்த
அன்பனைப் போற்றிடுவோம் – சீயோனே
நிந்தையில் சோதனையிலும்
வந்ததாலம் தொல்லைகளிலும்
மாண்டவரோடு எம்மையும் மாளா
ஆண்டவர் ஆதரித்தார் – சீயோனே