seerpatuththi nilai niruththupavare – Seerpaduthi nilai Niruthubavarae

சீர்படுத்தி நிலை நிறுத்துபவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சீர்படுத்தி நிலை நிறுத்துபவரே – Seerpaduthi nilai Niruthubavarae
சீர்படுத்தி நிலை நிறுத்துபவரே
பெலப்படுத்தி பயன் படுத்துபவரே
வாக்குத்தத்தங்களை நிறைவேற்றும் தெய்வமே
உம் வார்த்தை ஒன்றும் கீழ விழவில்லையே
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
யேசுவே
1.விழுந்து போன தாவீதின் கூடாரத்தை
மறுபடி எடுப்பித்து கட்டுவேன் (நிறுத்துவேன்) என்றீரே
விழுந்து போன என்
வாழ்க்கையை நீர் மறுபடி
நிலைநிறுத்துவீர்
பழுதாய் போன என்
வாழ்க்கையை நீர் நிச்சையம் சீர்படுத்துவீர் – உம்மை ஆராதிப்பேன்
2.தள்ளப்பட்ட மரமாய் நான் கிடந்தேன்
உம் கரம் தூக்கி என்னை நிறுத்தியதே
உம் சுவாசத்தை என்மேல் ஓதினீரே கணிதரும்படி செய்தீரே
உம் ஆவியை எனக்குள் ஊற்றினீரே என்னை செயல் படும்படி செய்தீரே
என் மேல் உதிக்கும் வெளிச்சம் நீரே
புதிய காரியங்கள் செய்பவர் நீரே -2