Searvatheppothu Paavi

சேர்வதெப்போது பாவி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

பல்லவி
சேர்வதெப்போது பாவி – சொர்க்க இன்பத்தை
சேர்வதெப்போது பாவி – மோட்ச இன்பத்தை
சேர்வதெப்போது பாவி?
சரணங்கள்
ஞாலத்தில் வந்த குருநாதனைப் பணியாமல்
காலமிருக்குதென்று கவலையற்றிருந்தால் – சேர்
அக்ஷயன் இயேசுவின் பக்ஷமதை மறந்து
இரக்ஷையைத் தள்ளி துர் இச்சையில் திரிந்தால் – சேர்
பாவப் பாரஞ் சுமந்து பரிதவிக்கும் பாவியைக்
கூவி அழைத்து நிற்கும் காவலனை விட்டால் – சேர்
திருக்கு முறுக்குப் பண்ணும் செருக்குள்ள நெஞ்சத்தைதான்
உருக்கமுள்ள இயேசுவின் திருக்கரம் வையாவிடில் – சேர்
உள்ளத்தைத் திறந்து நீ உண்மையை அறியாமல்
கள்ளத்தனம் பண்ணிக் காலத்தைக் கழித்தால் – சேர்
இரட்சகர் வந்துன்னை இரட்சிக்க நிற்கும்போது
கட்சி பண்ணிக்கொண்டு துஷ்டனாக அலைந்தால் – சேர்
சேர்வதெப்போது பாவி பாடல் வரிகள், Searvatheppothu Paavi Lyrics