Scale: Eb minor

என் தகப்பனே நீர் செய்த
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Scale: Eb minor
என் தகப்பனே நீர் செய்த நன்மைகளை
சொல்லி முடியாதையா
அதை எண்ணி முடியாதையா-2
(என்) உள்ளத்தின் ஆழத்தில் இருந்து-2
நன்றி சொல்கின்றேன்
உம்மை பாடுகின்றேன்-2-என் தகப்பனே
1.என் தாழ்மையில் என்னை நினைத்தீர்
என் ஏழ்மையில் என்னைக் கண்டீர்-2
எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தீர்
நன்றி இயேசையா-2
(உமக்கு) நன்றி இயேசையா-4-என் தகப்பனே
2. புழுதியிலே கிடந்த என்னை
கிருபையினால் தூக்கினீரையா-2
கண்ணீர்களாலே நன்றி சொல்கின்றேன்
நன்றி இயேசையா-2
(உமக்கு) நன்றி இயேசையா-4-என் தகப்பனே
3.கடந்து வந்த பாதைகளை
நினைத்து தினம் நன்றி சொல்வேன்-2
உயிருள்ள வரையில் துதித்திடுவேன்
நன்றி இயேசையா-2
(உமக்கு) நன்றி இயேசையா-4-என் தகப்பனே