Scale – D major

காலையில் உம்குரல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Scale – D major
மெல்லிய ஒளிதுளி வானத்தில் பரவ
பாடிடும் புல்லினம் குரல்களை உயர்த்த
சில்லென வீசிடும் தென்றலின் வருடலில்
தேன் மலர்மொட்டுக்கள் இதழ்களை விரிக்க
புல்லிடை இறங்கிய பனித்துளி ஜொலிக்க
கதிரவன் எழுந்தனன் கர்த்தரை துதிக்க
காலையில் உம்குரல் அழைத்திட கேட்டேன்
கண்விழுத்து உம்மை தேடியே பார்த்தேன்
திறந்தஎன் வேதம் முன்பாய் அமர்ந்தேன்
வசனத்தின் வழிநீர் பேசிட கேட்டேன்(2)
1.வைகறை சூரியன் கதிர்களை கண்டேன்
அகவிருள் நீக்கும் அருளினை உணர்ந்தேன்
காலையில் புதிதாய் பூத்திட்ட மலரில் நித்தமும்
கிருபை புதிதென அறிந்தேன். (2).
2) புகையென எழும்பிய வெண்பனி மேகம்
மலைகளை மூடி மறைப்பதை பார்த்தேன்
செட்டையின் மறைவில் மூடியே காக்கும்
அன்பினை நினைத்தே கண்கள் பனித்தேன் (2)
3) காலைகள் தோரும் கிருபைகள் புதிது
கர்த்தரின் நாமம் துதித்திட இனது
வெள்ளமாய் வீழும் அருவியின் குளிரில்
நனைந்திடும் சுகமே ஆவியின் நிறைவு.(2)