saththiyadhil vazhi nadaka kirubai

சத்தியத்தில் வழி நடக்க கிருபை தாங்கப்பா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சத்தியத்தில் வழி நடக்க கிருபை தாங்கப்பா
சத்தம் கேட்டு சித்தம் செய்ய
சொல்லித் தாங்கப்பா-2
சொல்லித் தாங்கப்பா...
இயேசையா இயேசையா (2)
1. சூரைச் செடியில் சோர்ந்த நேரம்
தூக்கி விட்டீரே-தூதன் அனுப்பி
தட்டியெழுப்பி உணவு தந்தீரே
2. மங்கி மங்கி எரிந்த போதும்
அணைக்கவில்லையே-நெரிந்து போன
நாணல் வாழ்வை முறிக்கவில்லையே
3. அனலும் இல்லா குளிரும் இல்லா
வாழ்க்கை வேண்டாமே-அனுதினமும்
அப்பா பாதம் அமர வேண்டுமே