saththan uruttu uruttu uruttu uruttu uruttu uruttuvan

உருட்டு உருட்டு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

சாத்தான் உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டுவான்
அவன் பொய் பொய்யா பொய் பொய்யா பொய்ய பேசுவான்-2
அவன நம்பி விடாத நம்பி ஏமாந்திடாத
அவன் கலர் கலரா ரீல் உடுவான் கலங்கி நிக்காத -2 – சாத்தான் உருட்டு
உன்னவிட யாருமில்ல பெருமை பேசுவான்
செல் போன்ல மணிக்கணக்கா பேச தூண்டுவான்-2 – அவன நம்பி விடாத
வழி சத்தியம் ஜீவனையும் தந்திடுவாரு
நீ வாழ வழி உனக்கு காட்டிடுவாரு-2
தம்பி கவலை படாதா தங்காய் கலங்கி நிக்காதா
கர்த்தர் இயேசு உனக்காக துணையிருப்பாரு – சாத்தான் உருட்டு
உனக்காக சிலுவையில ஜீவன் தந்தாரு
உன்ன மீட்க தன்ன பலியாக தந்தாரு
தம்பி கவலை படாதா தங்காய் கலங்கி நிக்காதா
கர்த்தர் இயேசு உனக்காக துணையிருப்பாரு – சாத்தான் உருட்டு
உனக்காக மீண்டும் அவர் வந்திடுவாரு
உன் கரம் பிடிச்சி பரலோகம் கூட்டி செல்வாறு
தம்பி கவலை படாதா தங்காய் கலங்கி நிக்காதா
கர்த்தர் இயேசு உனக்காக துணையிருப்பாரு – சாத்தான் உருட்டு