sarvaththaiyum pataiththa

சர்வத்தையும் படைத்த
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

சர்வத்தையும் படைத்த
சர்வ வல்ல தேவனே
உம்மை போற்றி புகழுவோம்
உம்மையே போற்றி புகழ்ந்திடுவோம்
1 நீர் சொன்னால் நடந்திடுமே
கட்டளை நிறைவேறுமே
2 நீர் தொட்டால் சுகமாவாரே
முடவனும் எழும்பி நடப்பானே
3 உம்மை தொட்டு சுகமானார்
உம் வார்த்தையால் உலகம் வந்ததே
4 நீர் தொட்டால் பிணம் எழும்புமே
நீர் தொட்டால் கண் திறக்குமே
5 நீர் சொன்னால் காற்றடங்குமே
உம் சொல்லை அலை கேட்குமே
6 உம் பார்வை பாவம் போக்குமே
உம் வார்த்தை எல்லாம் செய்யுமே